விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.இவரது காமெடிக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் கலக்கப்போவது யாரு சீசன் 5 தொடரில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார் அறந்தாங்கி நிஷா.

தொடர்ந்து பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை மகிழ்வித்து வந்தார் அறந்தாங்கி நிஷா.கடந்த வருடம் ஒளிபரப்பான விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 1 மூலம் தொகுப்பாளராகவும் தனது திறமையை நிரூபித்தார் அறந்தாங்கி நிஷா.

மாரி 2,கலகலப்பு 2,ஆண் தேவதை,கோலமாவு கோகிலா,இரும்புத்திரை உள்ளிட்ட சில சூப்பர்ஹிட் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தும் அசத்தியிருந்தார் அறந்தாங்கி நிஷா.இதனை தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரின் சீசன் 4-இல் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வந்தார் அறந்தாங்கி நிஷா.

சில வாரங்களுக்கு முன் இவர் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்த தொடரில் இருந்து வெளியேறிய இவர் தனது வீட்டுக்கு சென்ற வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக இருந்தது.தற்போது விஜய் டிவியின் ஷோ ஒன்றில் பங்கேற்கும் இவருடன் புகழ்,குரேஷி உள்ளிட்டோர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.நிஷாவை புகழ் கலாய்க்கும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

A post shared by Sudhan Kumar (@djblackchennai)