பூமி படத்தின் உழவா பாடல் லிரிக் வீடியோ வெளியீடு !
By Aravind Selvam | Galatta | December 16, 2020 08:44 AM IST
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹேக்டே இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்து அசத்தியிருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பயங்கர ஹிட் அடித்திருந்தது.
இதனை தொடர்ந்து பூமி,ஜனகனமன,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.பூமி ஜெயம் ரவி நடித்து வரும் 25ஆவது படமாகும்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Home Movie Makers இந்த படத்தை தயாரித்துள்ளனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 1அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படம் OTT தளத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வருகின்றன,இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.
இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.தற்போது இந்த படத்தின் உழவா என்ற பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Dikkiloona - Cycle Wheela Pola | Santhanam | Yuvan Shankar Raja | Karthik Yogi
15/12/2020 05:31 PM
Rajini Makkal Mandram's official statement on political party name and symbol
15/12/2020 05:00 PM