தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதிமன்றம் கட்சி சார்பாக  கமல்ஹாசன் , மதுரை திண்டுக்கல், சிவகாசி மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார்.


இந்நிலையில்  இன்று செய்தியாளர் சந்திப்பில், ‘’ ரஜினியும், நானும் மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டு தர தயாராக இருக்கிறோம். இருவரும் இணைந்து செயல்படவும் தயாராக இருக்கிறோம். எப்போதும் நானும் ரஜினியும் நண்பர்கள். ஒரே நேர் கோட்டில் தான் நிற்கிறோம். தமிழகத்தில் நிச்சயம் ஒரு மாற்றம் வேண்டும். இதையே தான் நாங்கள் இருவரும் சொல்லி வந்துள்ளோம். ஆனால் அரசியலில் அவரது கொள்கைகளை அவர் இன்னும் தெளிவுப்படுத்த வில்லை. இருப்பினும் மக்களுக்குக்காக நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். 


மேலும் எம்.ஜி.ஆர் திமுக வின் திலகமும் இல்லை. அதிமுக வின் திலகமும் இல்லை. எம். ஜி. ஆர் மக்கள் திலகம். அதிமுகாவின் நீட்சியாக நான் எம்.ஜி.ஆர் ஒப்பிடவில்லை. எம்.ஜி.ஆரின் நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம்.


எனது பரப்புரை பயணத்துக்கு அனுமதி கொடுத்து பின் அதை தடுப்பது எதற்கு? ஒவ்வொரு இடத்திலும் பரப்புரைக்கு செல்லும் போது அங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எதிர்கள் எப்படி செயல்பட்டாலும், நாங்கள் சட்டரீதியாக போராடுவோம்.  ” என்று தெரிவித்து இருக்கிறார்.