உலகம் முழுவதும் கொரோனா பதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், தலைநகர் டெல்லி தற்போது கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது. இதனால் 18 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்ட கூட்டத் தொடர் கொரோனா தொற்று காரணமாக 8 நாட்களில் முடித்துக் கொள்ளப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு இடையே சமூக இடைவெளியுடன் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 


இருப்பினும் கூட்டத்தொடர் முடிந்த பிறகு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் சில அமைச்சர்களுக்கு தொற்று ஏற்பட்டது. 40க்கும் மேற்பட்ட எம்பிகள் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. 


இதனால் நவம்பர் இறுதிவாரம் தொடங்க வேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. “ டெல்லி கடுமையான குளிருடன் போராடி வருகிறது. மேலும் கொரோனா தொற்றும் மூன்றாவது அலை தொடங்கி இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவது எளிதல்ல. குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றால், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க ரொம்ப வாய்ப்பு உள்ளது.  எனவே, இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நடக்காது. ஆனால்  ஜனவரி மாதம் பட்ஜெட் தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.