தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படம் 2022 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கியுள்ளார்.இதற்கு முன் இதே கூட்டணியின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துளளார்.குக் வித் கோமாளி புகழ்,யோகி பாபு,ராஜ் அய்யப்பா,சுமித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள்,ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் படத்தினை ஒத்திவைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.படம் நிச்சயம் கொரோனா பாதிப்பு குறைந்த பின் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.