அடுத்து சமந்தா பாடல்...விக்னேஷ் சிவன் பகிர்ந்த சிறப்பு தகவல் !
By Aravind Selvam | Galatta | January 06, 2022 16:23 PM IST
STR நடித்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் விக்னேஷ் சிவன்.இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரௌடி தான் படம் வெளியாகி இவரை வெற்றிப்பட இயக்குனர்கள் வரிசையில் அமர்த்தியது.இதனை தொடர்ந்து இவர் சூர்யா இயக்கத்தில் உருவான தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.
இந்த படமும் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இவற்றை தவிர பல படங்களில் படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் விக்னேஷ் சிவன்.இவர் அடுத்ததாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கி வருகிறார்.தனது நானும் ரௌடி தான் ஹிட் ஜோடி விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவுடன்,சமந்தாவையும் இணைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.
இந்த படத்தினை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் அடித்தன,இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் நான்காவது பாடல் விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.