தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படம் 2022 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கியுள்ளார்.இதற்கு முன் இதே கூட்டணியின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துளளார்.குக் வித் கோமாளி புகழ்,யோகி பாபு,ராஜ் அய்யப்பா,சுமித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள்,ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது போனி கபூரின் நெருங்கிய நண்பரும்,பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர் மற்றும் முன்னாள் சென்சார் போர்டு ஆலோசகரமான ராஜேஷ் வாசனி இந்த படத்தினை பார்த்துவிட்டு தற்போது தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் முக்கிய பிரமுகர்களுடன் இந்த படத்தினை பார்த்துள்ளதாகவும் Fast and Furious மற்றும் Mission Impossible படங்களுக்கு பதில் சொல்லும் இந்திய படமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இந்த படம் நிச்சயம் உங்களை பிரமிப்படைய செய்யும் என்று தெரிவித்துள்ளார்.புஷ்பா ஒரு பிரம்மாண்டம் என்றால் இது மற்றுமொரு பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே படத்தினை காண ஆவலாக இருக்கும் ரசிகர்களுக்கு இது இன்னும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.