தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் AK62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் மீண்டும் மூன்றாவது முறை அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தரின் ஸ்டண்ட் இயக்கத்தில் தயாரான துணிவு படத்தில் கல்யாண் மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட பொங்கல் வெளியீடாக துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதே தினத்தில் தளபதி விஜயின் வாரிசு படமும் ரிலீஸ் ஆவதால் இரண்டு படங்கள் மீதும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது துணிவு திரைப்படத்திலிருந்து பக்கா மாஸான புதிய ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அட்டகாசமான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

#Thunivu in theatres worldwide from tomorrow💥#Ajithkumar #HVinoth@boneykapoor @ZeeStudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures @mynameisraahul @ghibranofficial @shabirmusic @vaisaghofficial @ManjuWarrier4 @nirav_dop pic.twitter.com/HDJiiajt0b

— Zee Studios South (@zeestudiossouth) January 10, 2023