அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் முன்னணி ஹீரோவாகவும் தனக்கென தனி ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட நட்சத்திர நாயகராகவும் திகழும் அஜித்குமார் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பிளாக்பஸ்டர் படமாக வருகிறது துணிவு திரைப்படம். 3-வது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் தயாராகி இருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் துணிவு திரைப்படத்தை பார்த்துவிட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு புகைப்படத்தோடு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய அவர் துணிவு படம் குறித்த தனது முதல் விமர்சனத்தையும் கொடுத்துள்ளார்.

துணிவு திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து அவரிடம் கேட்டபோது, “உண்மையில் அது குறித்து என்னால் இப்போது தெரிவிக்க முடியாது இன்னும் செலவுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. செலவுகள் மொத்தமும் முடிந்த பிறகு தான் தெரியும். ஆனால் நிதர்சனம் என்னவென்றால் நான் திரைப்படத்தின் மீது மிகுந்த திருப்தியோடு இருக்கிறேன். நான் துணிவு திரைப்படத்தை நேற்றிரவு பார்த்துவிட்டேன். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட நீங்கள் பார்க்கலாம் அதை பதிவிட்டு இருக்கிறேன். என்னுடைய படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.” என தெரிவித்துள்ள போனி கபூர் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.