தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்த பிளாக்பஸ்டராக தயாராகியுள்ளது துணிவு திரைப்படம். பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

பக்கா அதிரடி ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் துணிவு படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றியுள்ளார். நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்ற, நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையலைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டிகள் பேசிய  துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் அஜித்குமார் அவர்கள் குறித்தும் துணிவு திரைப்படத்தை குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் சில அரபு நாடுகளில் துணிவு படம் தடை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது அது உண்மையா? எனக் கேட்டபோது, “அது பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.. தெரியவரும் என நினைக்கிறேன். ஆனால் தடை செய்வதற்கான எந்த விஷயமும் இல்லை. ஆனால் உண்மையில் இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை” என பதிலளித்தார். தொடர்ந்து சென்சார் கட் குறித்தும் கெட்ட வார்த்தைகள் குறித்தும் கேட்டபோது, “நான் படம் பார்த்துவிட்டேன் அதில் எந்த கெட்ட வார்த்தைகளும் இல்லை. சில மோசமான வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் அவை சாதாரணமாக தான் இருக்கும்.” என தெரிவித்துள்ளார். மேலும் நிறைய காட்சிகள் சென்சாரில் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் குறித்து கேட்டபோது, “அப்படி எந்த காட்சிகளும் நீக்கப்படவில்லை” என போனி கபூர் அவர்கள் தெரிவித்துள்ளார். போனி கபூர் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…