தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பாலிவுட்டிலும் மாணிக் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முன்னதாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ரீமேக்காக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் டிசம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகிறது.

தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - RJபாலாஜி இணைந்து நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பிப்ரவரியில் வெளிவர உள்ளது. மேலும் ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவநட்சத்திரம் மற்றும் தீயவர் கொலைகள் நடுங்க ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. 

இந்த வரிசையில் வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா.  ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் குமார்  இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் படமாக வருகிற டிசம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தை 18 ரீல்ஸ்ஸ் சார்பில் S.P.சௌத்ரி தயாரித்துள்ளார். 

கோகுல் பெண்டி ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பு செய்திருக்கும் டிரைவர் ஜமுனா படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் விறுவிறுப்பான ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள டிரைவர் ஜமுனா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.