அவெஞ்சர்ஸ் படக்குழுவுடன் இணைந்த சமந்தா – உற்சாகத்தில் ரசிகர்கள் .. அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களின் அடுத்த தொடரில் நடிகை சமந்தா இணைந்தார் - Samantha joins avengers director ruso brothers upcoming series | Galatta

உலகின் மிகப்பெரிய வசூல் குவித்த ‘அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படத்தின் இயக்குனர் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் அமேசான் பிரைமிற்க்காக உருவாகி வரும்  சர்வதேச அளவிலான தொடர் ‘சிடாடல்’.  உளவாளிகளையும் அவர்கள் செய்யும் வேலைகளையும் மையப்படுத்தி ஸ்பை திரில்லர் ஆக்ஷன் தொடராக உருவாகி வரும் சிடாடலில் தற்போது பிரபல பாலிவுட்  நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்து வருகிரார். இவருடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் ‘எட்டர்னல்’ பட கதாநாயகன் ரிச்சர்டு மடான் நடித்து வருகிறார். இந்த தொடர் இந்த ஆண்டின் சில மாதங்களில் வெளிவரவுள்ள நிலையில் இந்த தொடரை தொடர்ந்து இந்திய மொழி வடிவில் இந்த தொடர் எடுக்கபடவுள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த தொடரை புகழ்பெற்ற இந்திய தொடரான ‘தி ஃபேமிலி மேன்’ தொடரை இயக்கிய இயக்குனர் டிகே மற்றும் ராஜ் இயக்கவுள்ளனர். இந்த தொடரில் முக்கியமான கதபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளார். மேலும் தொடரின் கதாநாயாகியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு முன்னதாக வெளியானது. இதனிடையே சமீபகாலமாக நடிகை சமந்தாவிற்கு மயோசிடிஸ் என்ற அரிய நோயால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் நடிக்கும் படங்கள் தாமதமாகி வருகிறது. இதன் விளைவாக, அவர் தொடர்பாக பல வதந்திகள் பரப்பி வருகின்றனர். இதில் அவர் பிரபல சிடாடல் தொடரில் இருந்து விலகுவதாக வதந்தி பரவியது.மேலும் இது வதந்தி என்று சமந்தா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்  சர்வதேச தொடரான சிடாடல் தொடரில் சமந்தா நடிக்கவுள்ளதாக சிடாடல் படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. சமந்தா அதிரடியான உடையுடன் ஸ்பை போன்ற தோற்றத்தில் உள்ள புகைப்படங்களை பகிர்ந்த படக்குழு அதனுடன்,

jawan director atlee and wife priya become a parents to baby boy“மிஷன் தொடங்கியது... சிடாடல் இந்திய வடிவிலான தொடரை நாங்கள் தொடங்கிவிட்டோம்” என்று  குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள் அந்த பதிவை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

the mission is on 🔥
We have started rolling for the Indian installment of Citadel 🎬@Samanthaprabhu2 @rajndk @d2r_films @MenonSita @varun_dvn #RussoBrothers #agbofilms @AmazonStudios pic.twitter.com/lGzMlHzCEm

— prime video IN (@PrimeVideoIN) February 1, 2023

நடிகை சமந்தா தென்னிந்தியா சினிமாவில் மிக முக்கிய நடிகைகளில் ஒருவர். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமான இவர் கடந்த 2021 ல் இந்தியில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’  தொடர் மூலம் இந்திய அளவு பிரபலமானார்.

இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை மற்றும் உடல் நலம் பிரச்சனைகளால் நிறைய சிக்கல்களை சந்தித்து வருகிறார் சமந்தா. இருந்தாலும் தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் தெலுங்கில் யசோதா திரைப்படத்திலும் நடித்தார். இரு படங்களும் வெற்றியை அவருக்கு கொடுத்தது மேலும் தற்போது ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் மகாகவி காளிதாசர் எழுதிய அபிஞான சாகுந்தலம் என்ற சமஸ்கிருத நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் பிப்ரவரி 17 ல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேமிலி மேன் தொடர் இயக்குனர் தற்போது  ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘ஃபர்ஸி’ தொடரை இயக்கி முடித்துள்ளனர். இத்தொடர் வரும் பிப்ரவி 10 ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்த தொடரையடுத்து டிகே மற்றும் ராஜ் சிடாடல் இந்திய வடிவிலான தொடரை இயக்கவுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த தொடர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

அவெஞ்சர்ஸ் பட புகழ் இயக்குனர் ரூசோ பிரதர்ஸ் தயாரிப்பில்  தற்போது சமந்தா நடிக்கவிருப்பதால் அவரது ரசிகர்கள் வாழ்த்துகளுடன் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.  

 ஜப்பானில் ‘ஆர்.ஆர்.ஆர்’ சாதனை .. இந்தியாவில் இதுவே முதல் முறை  - ரசிகர்கள் கொண்டாட்டம்
சினிமா

ஜப்பானில் ‘ஆர்.ஆர்.ஆர்’ சாதனை .. இந்தியாவில் இதுவே முதல் முறை - ரசிகர்கள் கொண்டாட்டம்

மாஸ்டர் படத்திற்கு பிறகு திரையில் மாளவிகா மோகனன்.. - புதுப்பட டீசர் இதோ..
சினிமா

மாஸ்டர் படத்திற்கு பிறகு திரையில் மாளவிகா மோகனன்.. - புதுப்பட டீசர் இதோ..

மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல் தி கோர்' படத்தின் புது அப்டேட் .. ரசிகர்கள் கொண்டாடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா

மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல் தி கோர்' படத்தின் புது அப்டேட் .. ரசிகர்கள் கொண்டாடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு