அழகிய தொகுப்பாக OTTயில் வெளிவரும் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு... ரிலீஸ் தேதி அறிவிப்போடு வந்த புது வீடியோ இதோ!

OTTயில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண நிகழ்வின் டீசர் வெளியீடு,hansika wedding video of love marriage shaadi in disney plus hotstar | Galatta

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி ,சிங்கம் 2, மான் கராத்தே, அரண்மனை, புலி, போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து ஹன்சிகா நடிப்பில் அடுத்தடுத்து பார்ட்னர், 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஸ்ருதி, ரவுடி பேபி, கார்டியன் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. மேலும் இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் MY3 எனும் வெப்சீரிஸிலும் ஹன்சிகா நடித்துள்ளார். விரைவில் இந்த வெப்சீரிஸ் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே  சமீபத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபல தொழிலதிபர் சோஹைல் கட்டுரியாவை  தனது வாழ்க்கைத் துணையாக கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்வு அழகான தொகுப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நிகழ்ச்சியாக ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் வெளிவர தயாராகி இருக்கிறது. 

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் வாய்ஸ் ஓவரில், அழகான இவர்களின் திருமண நிகழ்வில் நடந்த விஷயங்களை ஒன்றிணைத்து அழகிய தொகுப்பாக, “ஹன்சிகாவின் லவ் ஷாடி டிராமா” என்ற பெயரில்  வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டீசர் சற்று முன்பு வெளியானது. அட்டகாசமான அந்த டீசர் இதோ…
 

மைக்கேல் படத்திற்கு தளபதி விஜயின் பிகில் தான் இன்ஸ்பிரேஷன்... எப்படி? உண்மையை உடைத்த சந்தீப் கிஷன்! வீடியோ இதோ
சினிமா

மைக்கேல் படத்திற்கு தளபதி விஜயின் பிகில் தான் இன்ஸ்பிரேஷன்... எப்படி? உண்மையை உடைத்த சந்தீப் கிஷன்! வீடியோ இதோ

தளபதி 67 பட அறிவிப்பு குறித்து வாரிசு இயக்குனர் வம்சி பைடிபல்லியின் ரியாக்ஷன்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி 67 பட அறிவிப்பு குறித்து வாரிசு இயக்குனர் வம்சி பைடிபல்லியின் ரியாக்ஷன்! விவரம் உள்ளே

தளபதி67 அறிவிப்போடு Social Media-ல் ரீ-என்ட்ரி கொடுத்த லோகேஷ் கனகராஜ்! ட்ரெண்டாகும் மாஸான புகைப்படம் இதோ
சினிமா

தளபதி67 அறிவிப்போடு Social Media-ல் ரீ-என்ட்ரி கொடுத்த லோகேஷ் கனகராஜ்! ட்ரெண்டாகும் மாஸான புகைப்படம் இதோ