அட்லீ – பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்.. அசத்தலான வீடியோவுடனான அறிவிப்பு இதோ..

இயக்குனர் அட்லீ பிரியா தம்பதியினருக்கு பிறந்தது ஆண் குழந்தை - Director Atlee and wife priya blessed with baby boy | Galatta

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். வெற்றியுடன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அட்லீ தன் இரண்டாவது படத்திலே உச்ச நடிகரான தளபதி விஜயுடன் கை கோர்த்தார். தொடர்ந்து தளபதி விஜயை வைத்து 'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரானர் அட்லீ. அதன் பின் வேறு ஒரு தளத்திற்கு அட்லீ உயர்ந்தார். தளபதியின் பிகில் படம் தொடர்ந்து யாரை அட்லீ இயக்க போகிறார் என்ற கேள்வி தமிழ் சினிமாவில் எழுந்தது. அதனை தொடர்ந்து அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் அவர்களை இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. அப்படத்திற்கு 'ஜவான்' என்று பெயரிட்டது படக்குழு. மேலும் படத்தில் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அனிரூத் ரவிச்சந்திரன் இசையமைக்கவுள்ளார். ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் மிகபெரிய வரவேற்பை தற்போது பெற்ற நிலையில் அட்லீயுடன் இணைந்து மும்மரமாக பட வேலைகளில் ஈடுபடவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்  அட்லீ - பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அட்லீ அட்டகாசமான வீடியோவுடன் வெளியிட்டு தம்பதியினரின் மகிழ்ச்சியினை அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து  தம்பதியினருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். வீடியோவுடன் அட்லீ - பிரியா தம்பதியினர்,

எல்லோரும் சொன்னது சரிதான். இப்படி ஓர் உணர்வு உலகில் இல்லை. அது போலவே இப்போது எங்களது மகன் இங்கு உள்ளார். பெற்றோர் எனும் பயணத்தை நாங்கள் இனிதே இன்று தொடங்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

They were right 😍 There’s no feeling in the world like this ♥️
And just like tat our baby boy is here! A new exciting adventure of parenthood starts today!

Grateful. Happy. Blessed. 🤗♥️🙏🏼 @priyaatlee pic.twitter.com/TzvoiFPzyc

— atlee (@Atlee_dir) January 31, 2023

இதனையடுத்து இயக்குனர் அட்லீ பகிர்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக பிரியா அட்லீ ஏற்பாடு செய்திருந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு திரைப்பிரபலங்கள் பங்குபெற்று சிறப்பித்தனர். மேலும் தளபதி விஜய் நேரில் சென்று பரிசு வழங்கி தம்பதியினரை வாழ்த்தியிருந்தார். மேலும் தற்போது  பிறந்த குழந்தையுடன் அட்லீ நேரம் செல்விடவிருக்க கூடும் என்பதால் ஷாருக் கான் உடனான ‘ஜவான்’ திரைப்படம் தற்போது துவங்காது என்று திரையுலகினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு திரையில் மாளவிகா மோகனன்.. - புதுப்பட டீசர் இதோ..
சினிமா

மாஸ்டர் படத்திற்கு பிறகு திரையில் மாளவிகா மோகனன்.. - புதுப்பட டீசர் இதோ..

மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல் தி கோர்' படத்தின் புது அப்டேட் .. ரசிகர்கள் கொண்டாடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா

மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல் தி கோர்' படத்தின் புது அப்டேட் .. ரசிகர்கள் கொண்டாடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆக்ஷன் கிங்கின் அட்டகாசமான Getup - தளபதி 67 படத்திற்காக இருக்குமோ.. வைரலாகும் புகைப்படம் இதோ..
சினிமா

ஆக்ஷன் கிங்கின் அட்டகாசமான Getup - தளபதி 67 படத்திற்காக இருக்குமோ.. வைரலாகும் புகைப்படம் இதோ..