தீ பறக்கும் சேஸிங்.. துணிவு படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்ட படக்குழு .. வைரலாகும் Action Glimpse இதோ..

அஜித் நடித்த துணிவு படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்ட படக்குழு - Ajith thunivu team shares action glimpse | Galatta

மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'துணிவு'. அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய திரைப்படம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று உலகளவில் பல இடங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் அஜித் திரைப்பயணத்தில் வெளிநாடுகளில் அதிகம் வசூலித்த படமாகவும் துணிவு திரைப்படம் உள்ளது. இப்படம் வெளியான நாள் தொடங்கி இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இணையத்திலும் சரி, திரையரங்கிலும் சரி துணிவு திரைப்படத்தின் சீற்றம் குறையாமல் உள்ளது. ‘நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வரிசையில் 3வது முறையாக அஜித்குமார் - போனி கபூர் - H.வினோத் - நீரவ்ஷா கூட்டணியில் துணிவு படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் அஜித் உடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் இணைந்து சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், சிபி புவனசந்திரன், ஜான் கொக்கென் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஜிப்ரான் இசையில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் விருந்துடன் வெளியானது. இப்படத்திற்காக பல வித்யாசமான ஆக்ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்காக பயன்படுத்தப்பட்ட யுக்திகள் அனைத்தும் ஜனரஞ்சகமாக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட பிரத்தேய glimpse ஐ தற்போது வெளியிட்டு உள்ளது படக்குழு. அதில் அதிரடி காட்சிகளும் சேஸிங் சீன்களும் தீ பறக்க வீடியோ உள்ளது. குறிப்பாக கிளைமேக்ஸ் போட் சேஸிங் காட்சியையும் இணைத்துள்ளது. படக்குழுவினரால் வெளியிடப்பட்ட இந்த வீடியோ  சிறிது நேரத்திலே இணையத்தில் வேகமாய் பரவி வருகிறது.  

#WorldOfThunivu THE MAKiNG 🙌#Thunivu #ThunivuHugeBlockbusterworldwide 💥 #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth@boneykapoor @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures @mynameisraahul @ghibranofficial pic.twitter.com/h0ehsbVhzt

— BayViewProjectsLLP (@BayViewProjOffl) January 28, 2023

மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல் தி கோர்' படத்தின் புது அப்டேட் .. ரசிகர்கள் கொண்டாடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா

மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல் தி கோர்' படத்தின் புது அப்டேட் .. ரசிகர்கள் கொண்டாடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆக்ஷன் கிங்கின் அட்டகாசமான Getup - தளபதி 67 படத்திற்காக இருக்குமோ.. வைரலாகும் புகைப்படம் இதோ..
சினிமா

ஆக்ஷன் கிங்கின் அட்டகாசமான Getup - தளபதி 67 படத்திற்காக இருக்குமோ.. வைரலாகும் புகைப்படம் இதோ..

பழம்பெரும் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவை அனுசரித்த தனுஷும் கேப்டன் மில்லர் படக்குழுவினரும்  - புகைப்படங்கள் இதோ..
சினிமா

பழம்பெரும் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவை அனுசரித்த தனுஷும் கேப்டன் மில்லர் படக்குழுவினரும் - புகைப்படங்கள் இதோ..