மாஸ்டர் படத்திற்கு பிறகு திரையில் மாளவிகா மோகனன்.. - புதுப்பட டீசர் இதோ..

மாளவிகா மோகனன் புதுப்படத்தின் டீசர் வெளியீடு - Malavika mohan new movie christy teaser out | Galatta

தமிழில் ரஜினி காந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பின் யாரும் எதிர்பார்க்காதது போல் தளபதி விஜய் உடன் கதாநாயகியாக ‘மாஸ்டர் நடித்தார். நடித்த முதல் படத்திலே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற மாளவிகா அதன் பின் தனுஷ் நடிப்பில் ஒடிடியில் வெளியான ‘மாறன் படத்தில் நடித்திருப்பார். தமிழில் பெரும் ரசிகர் பட்டாளத்தை குறுகிய காலத்தில் உருவாக்கிய மாளவிகா மோகனன் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் சமீபத்தில் அறிமுகமானாலும் மலையாள திரையுலகில் 2013 லே அறிமுகமாகிவிட்டார் துல்கர் சல்மானுடன் இணைந்து ‘பட்டம் போலேபடத்தில் நடித்திருப்பார். அதன் பின்  பல மலையாள படங்களில் நடித்தும் வந்தார். தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் மும்முரம் காட்டி வருகிறார் மாளவிகா மோகனன்.

இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் மலையாளத்தில் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘கிறிஸ்டி. வயது வேறுபாட்டில் மலரும் காதல் கதையை அடிப்படையாக கொண்டு திரைக்கதையாசிரியர் பெஞ்சமின் மற்றும் இந்துகோபன்  எழுத்தில் ஆல்வின் ஹென்ரி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக இருபது வயது மாத்திவ் தாமஸ் நடிக்க மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17 ல் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. ராக்கி மவுண்டைன் சினிமாஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு இசையமைக்கிறார்  96’ புகழ் கோவிந்த் வசந்தா. மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சிறுவயதுடைய கதாநாயகன் தன்னை விட வயது முதிர்ந்த பெண்ணிடம் காதல் ஈர்ப்பில் விழுகிறான் என்ற கதை ஒருபுறம் சர்ச்சையை கிளப்பினாலும் படம் ரசிக்கும் அளவு இருக்கும் என்று படக்குழுவினர் முன்பு தெரிவித்திருந்தனர். மேலும் படம் குறித்தும் படபிடிப்பில் இருந்தம் மாத்திவ் மாளவிகா வெளியிடும் வேடிக்கையான வீடியோ அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

here is the new update from mammootty jyothika movie kadhal the coreஇந்நிலையில் கிறிஸ்டி படத்தின் முதல் டிசரை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது. கிறிஸ்டி படத்தை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்கள் தற்போது இந்த டீசரை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

பழம்பெரும் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவை அனுசரித்த தனுஷும் கேப்டன் மில்லர் படக்குழுவினரும்  - புகைப்படங்கள் இதோ..
சினிமா

பழம்பெரும் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவை அனுசரித்த தனுஷும் கேப்டன் மில்லர் படக்குழுவினரும் - புகைப்படங்கள் இதோ..

சினிமா

"Emotional அ நடந்து கொண்டேன்.. நானும் மனிதன் தானே!” – ட்ரோல்களுக்கு வம்சி பதிலடி!.. முழு வீடியோ உள்ளே..

எதிர்பார்ப்பை தூண்டும் பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ – வைரலாகி வரும் பிரபலத்தின் பதிவு..
சினிமா

எதிர்பார்ப்பை தூண்டும் பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ – வைரலாகி வரும் பிரபலத்தின் பதிவு..