காஜல் அகர்வால்-ரெஜினா கெஸன்ட்ரா-யோகி பாபு இணைந்து கலக்கும் புதிய ஹாரர் காமெடி படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!

காஜல் அகர்வாலின் கருங்காப்பியம் பட ட்ரெய்லர் வெளியீடு,kajal aggarwal regina cassandra in karungaapiyam movie trailer | Galatta

தனக்கே உரித்தான ஸ்டைலில் கலகலப்பான என்டர்டைனிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் டி கே எனும் D.கார்த்திகேயன் இயக்கத்தில் வெளிவந்த யாமிருக்க பயமே மற்றும் காட்டேரி ஆகிய திரைப்படங்கள் ஹாரர் காமெடி திரைப்படங்களாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதனிடையே நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்க, D.கார்த்திகேயன் இயக்கத்தில் வெளிவந்த கவலை வேண்டாம் திரைப்படமும் நல்ல என்டர்டெய்னர் படமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வரிசையில் தனது அடுத்த ஹாரர் காமெடி திரைப்படமாக கார்த்திகேயன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் கருங்காப்பியம்.

PAVE ENTERTAINMENTS தயாரிக்க, காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி ஐயர், ஆதவ் கண்ணதாசன், யோகி பாபு, கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கருங்காப்பியம் திரைப்படத்தில் அதிதி ரவீந்திரநாத், TSK, ஷெரின் சேட், லொள்ளு சபா மனோகர் ஆகியர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள கருங்காப்பியம் படத்திற்கு SN.பிரசாத் இசை அமைத்துள்ளார். விரைவில் கருங்காப்பியம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருங்காப்பியம் திரைப்படத்தின் கலக்கலான ட்ரெய்லர் தற்போது வெளியானது. ரசிகர்களின் கவனம் தீர்த்த அந்த ட்ரெய்லர் இதோ…
 

தளபதி 67-ல் ஏஜென்ட் விக்ரமாக உலகநாயகன் கமல்ஹாசன் இணைகிறாரா..? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல்!
சினிமா

தளபதி 67-ல் ஏஜென்ட் விக்ரமாக உலகநாயகன் கமல்ஹாசன் இணைகிறாரா..? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல்!

மைக்கேல் படத்திற்கு தளபதி விஜயின் பிகில் தான் இன்ஸ்பிரேஷன்... எப்படி? உண்மையை உடைத்த சந்தீப் கிஷன்! வீடியோ இதோ
சினிமா

மைக்கேல் படத்திற்கு தளபதி விஜயின் பிகில் தான் இன்ஸ்பிரேஷன்... எப்படி? உண்மையை உடைத்த சந்தீப் கிஷன்! வீடியோ இதோ

தளபதி 67 பட அறிவிப்பு குறித்து வாரிசு இயக்குனர் வம்சி பைடிபல்லியின் ரியாக்ஷன்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி 67 பட அறிவிப்பு குறித்து வாரிசு இயக்குனர் வம்சி பைடிபல்லியின் ரியாக்ஷன்! விவரம் உள்ளே