மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல் தி கோர்' படத்தின் புது அப்டேட் .. ரசிகர்கள் கொண்டாடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மம்முட்டி ஜோதிகா நடிக்கும் காதல் தி கோர் திரைப்படத்தின் அப்டேட் - - Kadhal the core post production update | Galatta

ஜோதிகா ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். பின் நடிகர் சூர்யாவை மணந்து சினிமாவில் இருந்து ஒய்வு பெற்றார். அதன் பின் 8 ஆண்டு கழித்து ஜோதிகா மீண்டும் திரைத்துறையில் களம் இறங்கினார். தன் கணவருடன் இணைந்து '2D தயாரிப்பு நிறுவனம்' தொடங்கி படங்களை தயாரிக்க முன்வந்தனர். அதன் படி அந்த தயாரிப்பின் முதல் படத்தில் ஜோதிகா நடித்தார்.  அதன் பின் கதையை மையப்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா. இவருக்கென தனி ரசிகர் கூட்டம் அன்று இருந்தது. அந்த கூட்டத்தை மீண்டும் உருவாக்கினார் ஜோதிகா.

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ‘காதல் தி கோர் என்ற படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டியுடன் ஜோதிகா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிகை ஜோதிகா மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக ஜோதிகா ‘சீதா கல்யாணம்’ என்ற படத்தில் நடித்தார். நல்ல வரவேற்பை அவருக்கு மலையாளத்தில் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி 70 வயதை கடந்தாலும் இன்னும் பல படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார். பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்களெல்லாம் கதையை மையப்படுத்தியே இருந்து வருகிறது. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ‘புழு, ‘ரோஸ்சாச்ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மம்முட்டி தயாரிப்பில் உருவாகி வரும் காதல் தி கோர் திரைப்படத்தை பிரபல மலையாள திரைப்படமான ‘தி கிரேட் இந்திய கிச்சன் திரைப்படத்தை இயக்கிய  ஜியோ இப்படத்தை இயக்குகிறார்.  

action king arjun new getup for lokesh kanagaraj vijay thalapathy 67 movieகாதலை மையப்படுத்தி குடும்பப் படமாக உருவாகி இருக்கும் காதல் தி கோர் திரைப்படத்தின் இறுதி கட்ட தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்ற அப்டேட்டை புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

.@KaathalTheCore Post Production works on full swing 🔥#KaathalTheCore #Mammootty #Jyotika #MammoottyKampany #JeoBaby #WayfarerFilms #TruthGlobalFilms @mammukka pic.twitter.com/Hb932nUK0H

— MammoottyKampany (@MKampanyOffl) January 26, 2023

சினிமா

"Emotional அ நடந்து கொண்டேன்.. நானும் மனிதன் தானே!” – ட்ரோல்களுக்கு வம்சி பதிலடி!.. முழு வீடியோ உள்ளே..

எதிர்பார்ப்பை தூண்டும் பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ – வைரலாகி வரும் பிரபலத்தின் பதிவு..
சினிமா

எதிர்பார்ப்பை தூண்டும் பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ – வைரலாகி வரும் பிரபலத்தின் பதிவு..

அஜித், சூர்யாவிற்கு குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்.. – அதிர்ச்சியில் திரையுலகம்.. நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு..
சினிமா

அஜித், சூர்யாவிற்கு குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்.. – அதிர்ச்சியில் திரையுலகம்.. நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு..