தென்னிந்திய திரை உலகின் மிகப்பெரிய நட்சத்திர நாயகராக தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட அஜித் குமாரின் அடுத்த அதிரடி திரைப்படமாக தயாராகி இருக்கிறது துணிவு. இப்படத்தில் அஜித் குமார் உடன் இணைந்து பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், பிக் பாஸ் பாவணி, அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக போனி கபூர் - H.வினோத் - நீரவ்ஷா கூட்டணியில் துணிவு திரைப்படம் தயாராகி இருக்கிறது.

ரெட் ஜெயன்ட் மூவி சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்தியாவைத் தாண்டி துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமைகளை கைப்பற்றியுள்ள லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் துணிவு ரிலீஸுக்காக வேற லெவல் ப்ரொமோஷனில் களமிறங்கியுள்ளது.

அந்த வகையில் தற்போது இதுவரை கோலிவுட் திரை உலகில் எந்தத் திரைப்படத்திற்கும் இல்லாத வகையில் அட்டகாசமான ப்ரொமோஷன் துணிவு படத்திற்காக தயாராகி இருப்பதாகவும் வருகிற டிசம்பர் 31ஆம் தேதி அதனை அறிவிக்கும் வகையில் அந்த நாளை துணிவு தினம் என கொண்டாட உள்ளதாகவும் தற்போது லைகா ப்ரொடக்க்ஷன் அறிவித்துள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் ஆகாயத்தில் பாராஷூட் சாகச வீரர் துணிவு பட பேனரை துபாயில் ஆகாயத்தில் பறக்க விடும் வீடியோவையும் லைகா குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அட்டகாசமான அந்த வீடியோ இதோ…
 

Going the AK way! 😎 For the 1st time ever, an announcement like never seen before for a Kollywood film 🎥

Watch this space as we are coming with an exciting update for 31st Dec 22! We call it the #ThunivuDay 💥#AjithKumar 😎 #THUNIVU 💥 #NoGutsNoGlory 💪🏻✨ #ThunivuPongal pic.twitter.com/l4GGlv1nk3

— Lyca Productions (@LycaProductions) December 26, 2022