மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி என்கிற சூர்யா உள்பட 10 பேரை போலீசார் அதிரடைியாக கைது செய்துள்ளனர். 

“ரௌடி பேபி சூர்யா” என்றால், டிக்டாக் பிரியர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. இந்தியாவில் டிக்டாக் நடைமுறையில் இருந்தபோது, அந்த அளவுக்கு அவர் டிக்டாக் பிரபலமாக அறியப்பட்டு வந்தார். 

திருப்பூர் அய்யம்பாளையம் அடுத்த சபரிநகரைச் சேர்ந்த “சுப்புலட்சுமி” என்ற பெண் தான், டிக்டாக்கில் தன் பெயரை “சூர்யா” என்ற பெயரில் தொடர்ந்து அலப்பறைகள் செய்து சேட்டையான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் அளவுக்கு அதிகமான சேட்டைகள் செய்ததால், அவர் பெயர் காலப்போக்கில் ரவுடி பேபி சூர்யாவாக மாறிப்போனது

இப்படியாக, டிக்டாக்கில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவு செய்வதில் பெயர் போனவர் ரவுடி பேபி சூரியா, டிக்டாக் தடைசெய்யப்பட்ட பிறகு, சமீப காலமாகவே, அவர் தொடர்ந்து புதிய புதிய சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். 

அத்துடன், டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 
சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

இந்நிலையில், திருச்சி மாநகரில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாநகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் படி, திருச்சி உறையூர் அண்ணாமலை நகரில் உள்ள உனா ஸ்பா, தில்லை நகரில் உள்ள குப்தா ஸ்பா, வேதா ஸ்பா, ஆர்சிட் ஸ்பா, டிவிஎஸ் டோல்கேட் - பொன்மலை ஜி கார்னர் சர்வீஸ் சாலையில் உள்ள சன் பியூட்டி ஸ்பா ஆகிய 5 மசாஜ் சென்டர்களிலும் காவல் துறையினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.
 
இந்த அதிரடி சோதனையில், பல மசாஜ் சென்டர்களிலும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பெண்கள் உள்பட 10 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 12 பெண்களை போலீசார் மீட்டு, அவர்களுக்கு மருத்துவமனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கே.கே. நகர், தில்லை நகர், உறையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட இரு பெண்களில் ஒருவர் டிக்டாக் பிரபலம் 34 வயதான ரவுடி பேபி என்கிற சூர்யாவும் ஒருவர் என்பது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், பலரும் ரவுடி பேபி சூர்யாவுக்கு எதிராக எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கைது கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த டாக் பிரபலம் ஜிபி முத்து, ஆவேசமாக, “ரௌடிபேபி சூர்யா கேவலமான பாலியல் தொழில் செய்வானு நான் நினைத்து கூட பார்க்கவில்லை” என்று, தெரிவித்துள்ளார். இதனால், ஜிபி முத்து ஆவேசமாக பேசிய இந்த செய்தியும், இணையத்தில் வைரலாகி வருகிறது.