பிரபல சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளியினுமான சித்ரா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வெளியாகி அனைவரயும் சோகத்தில் ஆழ்த்தியது.சித்ராவின் குடும்பத்தினருக்கு பலரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இவருக்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது ஆனால் சித்ராவின் மரணத்திற்கு பிறகு இருவருக்கும் பதிவு திருமணம் இரண்டு மாதங்களுக்கு முன் முடிந்தது என்ற தகவல் கிடைத்திருந்தது.சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஹேமந்த் மற்றும் சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழ்பாக்கம் மருத்துவமனையில் இவரது உடலின் பிரேத பரிசோதனை நிறைவடைந்தது.இவரது மரணத்தில் மர்மம் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர்.முகத்தில் இருந்த கீறல்கள் சித்ராவால் போடப்பட்டது தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிந்து , சித்ராவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு , ரசிகர்களும் பிரபலங்களும் இறுதி மரியாதையை செய்து வருகின்றனர்.சித்ராவின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று தெரிகிறது.