சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்தியவாணி நகரில், கூவம் ஆற்றங்கரை ஓரம் உள்ள வீடுகளை ஆக்கிரமிப்பில் இருப்பதாகச் சொல்லி காலி செய்ய பொதுப்பணித் துறை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. 


முதற்கட்டமாக 1700 குடும்பங்கள் அங்கு மாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள 345 குடும்பங்கள் கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக மாற்றப்படாமல் இருந்தது.

பொதுப்பணித்துறை சார்பில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில்  இன்று காலை 11 மணியளவில் அப்பகுதிக்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்குள்ள வீடுகளை ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை கொண்டு இடிக்க முயன்றனர்.  


வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, இதை விட்டால் எங்கு வேறு வாழ்விடம் இல்லை என அந்த போராட்டம் செய்து வருகிறார்கள்.  அங்கு வசித்து வந்தவர்களுக்கு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. 


பொதுப்பணித்துறை சார்பில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில். இன்று அந்த வீடுகளை இடிக்க அரசுத்தரப்பு அங்குச் சென்று வீடுகளை இடிக்க தொடங்கியது. தங்களது வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து. அருகில் உள்ள கூவம் ஆற்றில் இறங்கி இருபதுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.