வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. லாக்டவுன் பிரச்சனை முடிந்து வெகு நாட்களுக்கு பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பு சூடுபிடித்துள்ளது. மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் ஆர்வம் காட்டினார் சிலம்பரசன். மாநாடு அப்டேட் குறித்து காத்திருந்த ரசிகர்களுக்கு சுவையூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்ததாம். இதனைத்தொடர்ந்து சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். மாநாடு படக்குழுவினரை பத்திரமாக பார்த்த கொண்ட புதுச்சேரி ஹோட்டல் நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. 

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் சென்றனர். முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார் சிலம்பரசன். ஒரு மாத காலத்திற்குள் நடித்து முடித்ததுடன், டப்பிங்கும் பேசிக் கொடுத்துவிட்டார். ஷூட்டிங்கில் வேகம் காட்டும் சிலம்பரசனை புகழ்ந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

சமீபத்தில் மாநாடு படத்தின் இடைவெளியின் போது தனது மருமகனுடன் காரில் பயணம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் சிம்பு. சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. குளிர்கால உடைகளை அணிந்து தாடி மீசை கொண்ட கெட்டப்பில் போட்டோஷூட் செய்து பட்டையை கிளப்பியுள்ளார் சிம்பு. உடலை எடையை குறைத்து, வித விதமான போட்டோஷூட்டுகளை செய்து இன்பதிர்ச்சி தருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)