பார்வதி அம்மாள் வறுமையின் காரணமாக 25 வருடங்களுக்கு மேலாக வாடகை வீட்டில்  வசித்து வருவதாக தெரிவித்தார்.

parvathyசமீபத்தில்  த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ் , நடித்து Amazon primeல் வெளியாகியிருக்கும் படம் ஜெய் பீம். ஒரு உண்மை சம்பவத்தை மய்யமாக வைத்து இக்கதை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல்நிலையத்தில் ராஜாகண்ணு என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் கொல்லப்பட்டதையும், இதற்கு நீதி கேட்டு அவரது மனைவி பார்வதி  வழக்கறிஞர் சந்துரு நடத்தும் சட்டப்போராட்டம்தான் ஜெய் பீம். ராஜாகண்ணு மீது திருட்டுப் பழி விழுகிறது.ராஜாகண்ணு போலீஸாரின் பயங்கரத் தாக்குதலால் பாதிக்கப்படுகிறார். இந்நிலையில் கணவனின் நிலை அறியாது கையறு நிலையில் கர்ப்பிணிப் பெண்ணாகத் தவிக்கிறார் செங்கேணி. பின்பு ராஜ்கண்ணு இறந்த செய்தி கேட்டு தன் கணவர் ராஜாக்கண்ணுவின் இறப்பிற்கு நீதி கேட்டு சட்டப்போராட்டம் நடத்துகிறார் அதில் வெற்றியும் பெறுகிறார். இதுவே ராஜ்கண்ணு பார்வதியின் உண்மை சம்பவம் ஆகும்.


தற்போது பார்வதி அம்மா சென்னை போரூரில் உள்ள  குன்றுமேடு பகுதியில் சுமார் 25 வருடங்களாக வாடகைக்கு  அப்பகுதியில் வசித்து வருகிறார். வறுமையின் காரணத்தினால் பார்வதி அம்மாள் குடிசை வீட்டில்  குப்பையும் சாக்கடைநீர்  கொசுக்கடிக்கும் நடுவே வாழ்ந்துவருகிறார் .பார்வதி அம்மாள் அவரது மகள் மருகன் பேரனுடன் வசித்து வருகிறார். பார்வதி அம்மாவின் மகள் ஒரு கூலி தொழிலாளி. 

பார்வதி அம்மாவிடம்  இதுபற்றி விசாரித்தபோது அவரது வீடு மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி கொசுகடி மற்றும் சாக்கடை நீர் கலப்பதனால் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் வருகிறது என்றும் பார்வதி அம்மாள் வசிக்கும் இடத்திற்கு சரியான ரோடு வசதி இல்லாததால் கல்லும் முள்ளும் இருக்கும் ஒத்தையடி பாதையில் தான் செல்லமுடியும் என பார்வதியம்மாளும் அப்பகுதி மக்களும் தெரிவித்தனர். மழைக்காலங்களில் வீட்டிற்குள் பாம்பு பூரான் பூச்சிகள் வருவதனால் இரவில் அச்சமாக உள்ளது என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பார்வதி அம்மாளின் மருமகன் சரவணனிடம்  விசாரித்தபோது தான் ஒரு கட்டிட தொழிலாளி என்றும்  பார்வதி அம்மாள் சுமார் 18 வருடமாக அவர்களுடன் வசித்து வருவதாக கூறினார்.
தாங்கள் ஒரு ஏழ்மையான குடுமபத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு என்று சொந்த வீடோ நிலமோ இல்லாததால் வறுமையில் இது போன்ற குடிசை வீட்டில் வசிப்பதாக தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது: இப்பகுதியில் ரோடு வசதி இல்லாததால் மழை நீர் தேங்கி பாம்பு விஷப்பூச்சிகள் வருகிறது மேலும் இப்பகுதியில் பெண்கள்,பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் கைக்குழந்தைகம்  உள்ளதால் மிகவும் அச்சத்துடன் வசித்துவருவதாக சரவணன் தெரிவித்தார். அரசாங்கம் தங்களுக்கு வீட்டு பட்டாவும் இப்பகுதியில் ரோடு வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.