தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் காமெடியனாக முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து காமெடியில் கலக்கிய நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாகவும் நகைச்சுவையை முன்னிறுத்தும் பல காமெடி என்டர்டெய்னர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் கடைசியாக சந்தானத்தின் நகைச்சுவை சரவெடியாக வெளிவந்த டிக்கிலோனா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ஏஜன்ட் சாய் சீனிவச ஆத்ரெயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கா ஏஜன்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக RK என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள சபாபதி அடுத்து நகைச்சுவை திரைப்படமாக வருகிற நவம்பர் 19-ம் தேதி ரிலீசாகிறது.  சந்தானத்துடன் இணைந்து ப்ரீத்தி வர்மா, M.S.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, விஜய் டிவி புகழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S. இசையில், பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ள, சபாபதி படத்திற்கு லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் சபாபதி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. சந்தானத்தின் கலகலப்பான சபாபதி ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.