இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவன் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக உலகெங்கும் பல மொழிகளில் வெளியாகிறது மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம்.

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக உருவாகியுள்ள ராக்கெட்ரி அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வருகிற டிசம்பர் 17ஆம் தேதி நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீசாகிறது மாதவன் நடித்துள்ள DECOUPLED வெப் சீரீஸ்.

மாதவன் மற்றும் சுர்வீன் சாவ்லா இணைந்து நடித்துள்ள DECOUPLED வெப் சீரிஸை மனு ஜோசப் எழுத, ஹார்டிக் மேத்தா இயக்கியுள்ளார். பீயூஸ் புட்டி ஒளிப்பதிவில், பரிக்ஷித் ஜா மற்றும் மணன் அஸ்வின் மேத்தா இணைந்து படத்தொகுப்பு செய்துள்ள DECOUPLED வெப் சீரிஸை பாம்பே ஃபேபல்ஸ் & ஆண்டோலன் தயாரித்துள்ளது.

ஒரு திருமணமான தம்பதி விவாகரத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கி திருமணத்தில் முடிவது போல நகரும் கலாட்டாவான இந்த DECOUPLED வெப்சீரிஸ் ரசிகர்களை கவரும் விதமாக அமையும் என்பது போல ட்ரெய்லர் அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது. கவனத்தை ஈர்த்துள்ள மாதவனின் DECOUPLED வெப்சீரிஸின் கலகலப்பான  ட்ரெய்லர் இதோ…