கோடை விடுமுறைக்கு பின் தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் பாடத்தை கவனித்தார்.

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் முதல் தனியார் பள்ளிகள் வரை அனைத்துப் பள்களுமே தோரணம், வாழை மரங்கள் கட்டி இன்றைய தினம் முதல் நாள் பள்ளிக்கு வந்த இனிப்புகள் வழங்கி, சில இடங்களில் சால்வை அணிவித்தும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதில் பெரும்பாலன மாணவர்கள் புது சீருடை புது புத்தக வாசம் என்று, விடுமுறைக்கு பிறகு உற்சாகத்துடன் இன்றைய தினம் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.

அப்போது, திருவள்ளூர் வடகரை அரசு பள்ளியில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கவனித்தார். அப்போது, அந்த வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தமிழ் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

அதாவது, வடகரை அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியை ஒருவர், தமிழ் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, சக மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரும் அமர்ந்து தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும் முறையை மேசையில் அமர்ந்து கவனித்தனர். 

அத்துடன், இன்று முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

அதன் பிறகு, அடுத்த வாரம் முதல் வழக்கமான வகுப்புகள் எப்போதும் போல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

மேலும், இன்று முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு 20 நாட்களில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. 

இதன் காரணமாக, “அனைத்து ஆசிரியர்களும் 13 அம் தேதி பள்ளிக்கு கண்டிப்பாக வர வேண்டும்” என்று, ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி, இன்று காலை 9.10 மணி முதல் பள்ளிகள் தொடங்கி மாலை 4.10 மணியுடன் முடிவடைகிறது.

குறிப்பாக, இன்றைய தினம் முதல் வகுப்புக்கு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, இன்றைய தினம் முதல் நாள் என்பதால் சில தனியார் பள்ளிகளில் சில மணி நேரம் மட்டுமே முதல் வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதே போல், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.

இதனிடையே, முன்னதாக “கல்விச்சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! தமிழகம் பயன்பெறட்டும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.