தென்னிந்திய திரை உலகின் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்த இருக்கும் நடிகை சாய் பல்லவி அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் விரட்ட பர்வம். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து விரட்ட பர்வம் திரைப்படத்தை தயாரித்துள்ளன.

இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் விரட்ட பர்வம் படத்தில் சாய்பல்லவி மற்றும் ராணா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பிரியாமணி, நந்திதாதாஸ், நவீன் சந்திரா, ஈஸ்வரிராவ், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விரட்ட பர்வம் படத்திற்கு டேனி சான்சேஸ்-லோபஸ் மற்றும் திவாகர் மணி ஒளிப்பதிவு செய்ய சுரேஷ் பாபி இசையமைத்துள்ளார். 

வருகிற ஜூன் 17-ஆம் தேதி விரட்ட பர்வம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரட்ட பர்வம் திரைப்படத்தில் இருந்து சலோ சலோ எனும் பாடல் வீடியோ தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலர் கவனத்தையும் ஈர்க்கும் அந்த பாடல் வீடியோ இதோ…