தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஹே சினாமிகா. இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைடாரியுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்த ஹே சினாமிகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து காஜல் அகர்வால் நடிப்பில் கருங்காப்பியம் மற்றும் கோஷ்டி உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. மேலும் பாலிவுட்டில் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உமா திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் சமீபத்தில் அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகியானார். இதனையடுத்து தனது செல்ல மகனுக்கு நீல் கிச்சுலு என காஜல் அகர்வால் பெயர் சூட்டினார். இதனை அடுத்து தன் மகனை மார்பில் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது செல்ல மகன் நீல் கிச்லுவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வரும் அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.