மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் நிவின் பாலி, இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து நிவின்பாலி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் ராஜீவ் ரவி இயக்கத்தில் மலையாளத்தில் நிவின்பாலி நடித்துள்ள துறமுகம் திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், தொடர்ந்து படவெட்டு திரைப்படம் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக மலையாளத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் காமெடி அட்வென்சர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் மஹாவீர்யர். பாலி Jr. பிக்சர்ஸ் மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் அபரிட் ஷைன் இயக்கியுள்ளார்.

நிவின் பாலி, ஆசிஃப் அலி, லால், ஷான்வி ஸ்ரீவட்சா, சித்திக், விஜய் மேனன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் மஹாவீர்யர் திரைப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவில் கிஷான் சப்ரா இசையமைத்துள்ளார். இந்நிலையில் மஹாவீர்யர் திரைப்படம் வருகிற ஜூலை 21 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.