தமிழ் சினிமாவின் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம், தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தனுஷ் நடிக்கும் வாத்தி, இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தொடர்ந்து நடிகராகவும் புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரெபல் திரைப்படத்தில் நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார், அடுத்ததாக செல்ஃபி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து "13" திரைப்படத்திலும் நடித்துவருகிறார். சமீபத்தில் "13" திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.

முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் இடிமுழக்கம். பிரபல தயாரிப்பாளர் கலைமகன் அவர்களின் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  இடிமுழக்கம் திரைப்படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இடிமுழக்கம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இநநிலையில் இடிமுழக்கம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. கவனத்தை ஈர்க்கும் ஜீவி பிரகாஷின் இடிமுழக்கம் பட ஃபர்ஸ்ட் லுக் இதோ…