“நடிகை சித்ரா வழக்கில் யாரையோ காப்பாத்துவதற்காக எங்கள் மகன் கைது செய்யப்பட்டிருப்பதாக” சித்ராவின் கணவரான ஹேம்நாத்தின் தந்தை பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை 28 வயதான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதி காலை நேரத்தில், சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். அப்போது, தனியார் ஹோட்டலில் நடிகை சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், சித்ராவின் மரணத்துக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாயார் விஜயா உள்பட பலரும் பகிரங்கமாக குற்றம் சாட்டி வந்தனர்.

இதனால், சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் கடந்த ஒரு வார காலமாக காவல் துறையினர் தீவிரமாக நடத்திய விசாரணை நடத்தி வந்தனர். நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சித்ராவின் கணவரான ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார். 

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், “சித்ராவின் பெற்றோரிடம் நாங்கள் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை” என்று, குறிப்பிட்டார். 

“ஹேம்நாத்தை கைது செய்ததை தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறிய ரவிச்சந்திரன், யாரையோ காப்பாற்றுவதற்காக ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதாக” பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார்.

இந்த செய்தி இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகின்றன. இதனால், ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், “யாரோயோ?” என்று, யாரை குறிப்பிட்டுப் 
பேசுகிறார் என்று, பதிலும் எதிர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால், அடுத்து முறை ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தும்போது, இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சின்னத்திரை நடிகை சித்ராவுடன் நடித்த சக நடிகர்கள், நடிகைகள், நண்பர்களை விசாரிக்க கோட்டாட்சியர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பட்டியல் தயாரிப்பு பணி முடிந்த பிறகு சக நடிகர்கள் உள்ளிட்டோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், பொன்னேரி கிளைச் சிறையில் உள்ளே ஹேம்நாத்தை வரவழைத்து விசாரிக்க கோட்டாட்சியர் திட்டமிட்டுள்ளார் என்றும், கூறப்படுகிறது.

குறிப்பாக, நடிகை சித்ரா தற்கொலை செய்யும் முன்பு மாமனாரிடம் பல மணிநேரம் போனில் பேசினார் என்றும், தற்போது அவரது செல்போனில் அது தொடர்பான ஆதாரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக புதிய செய்தி ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளன. 

இதனால், இது தொடர்பாக விசாரணை போலீசார் உடனே தொடங்க முடிவு செய்துள்ளனர். இதனால், நடிகை சித்ரா வழக்கில் அடுத்தடுத்து புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.