திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 வயது சிறுவனை காதலித்து கரம் பிடித்த 19 வயது கல்லூரி மாணவியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

"17 வயது சிறுவனை 19 வயது  பட்டதாரி பெண்  காதலித்து திருமணம் செய்து, காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது".

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் 17 வயது சிறுவனும் 19 வயது பட்டதாரி இளம் பெண்ணும் காதல் திருமணம் செய்துகொண்டு  தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, அங்குள்ள நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான அஸ்வினி என்ற பட்டதாரி இளம் பெண், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை, கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்து உள்ளார். 

இப்படியாக, இவர்கள் காதலர்களாக அந்த பகுதியில் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இவர்களது காதல் விசயம், இருவரின் பெற்றோருக்கும் தெரிந்துவிட்டது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இரு வீட்டார் பெற்றோரும், இவர்களது காதலுக்கு இரு வீட்டு தரப்பிலும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, அதன் படி திட்டம் தீட்டினர். திட்டமிட்டபடியே, காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். 

கடந்த 7 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடி, தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த தகவல், காதலர்கள் இருவரது பெற்றோருக்கும் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்து, இரு தரப்பினலிருருந்தும் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த தவல், காதலர்களுக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் கையில் சிக்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருப்பதை உணர்ந்த காதலர்கள் இருவரும், தற்போது தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, அங்குள்ள நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

இதனால், காதல் திருமணம் செய்துகொண்ட காதலர்களிடமிருந்து புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி சுமூக முடிவு எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இதனால், அவர்கள் இரு தரப்பினரையும் நேரில் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.