தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் தமது இல்லத்தில் குடும்பத்தினருடன்  பொங்கல் விழாவை கொண்டாடினார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘’  மற்ற நாடுகளை சாராமல், சுய சார்பாக இந்தியா கொரோனா தடுப்பூசியை தயாரித்து இருக்கிறது. இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கும், அவர்களை ஊக்குவித்த மோடிக்கும்  நன்றி.

ஒரு தாய், குழந்தையை பாதுக்காப்பாக பெற்று எடுப்பது போன்று  நம் நாட்டின் விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்து , பல கட்ட ஆய்வுக்கு பிறகு தடுப்பூசியை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.  மாற்றுகருத்து சொல்பவர்கள் இதை தயதுசெய்து புரிந்துக்கொள்ள வேண்டும். நமது உயிரை காக்கும் தடுப்பூசி என்பதால், இதில் அரசியல் செய்ய வேண்டாம். 


மேலும் நாம் பிரேசிஸ், வங்கதேசம், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட  150 நாடுகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை தர உள்ளோம். கோவாக்சின் தயாரிக்கும் இடத்துக்கு நான் நேரில் சென்று பார்த்தேன். அதனால் நான் உறுதியளிக்கிறேன், இரண்டு தடுப்பூசியும் பாதுக்கப்பானது தான். பாதுக்காப்பு குறித்து அச்சம் வேண்டாம்.  நான் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருப்பதற்கு, பயம் காரணம் இல்லை.

மற்றவர்களுக்கு வேண்டும் என்பதற்காக போட்டுக்கொள்ளாமல் இருக்கிறேன். பதிவு செய்து வரிசையில் நின்று நிச்சயம் தடுப்பூசி எடுத்துக்கொள்வேன். மற்றவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வரை நாம் எடுத்துக்கொள்ள கூடாது என்பது தான் காரணம். தாரமரை மலர்ந்ததை போன்ற முக மலர்ச்சியோடு தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” கூறியுள்ளார்.