பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற 18 போட்டியாளர்களில் மக்கள் மத்தியில் அதிக மதிப்பையும் செல்வாக்கையும் பெற்ற போட்டியாளராக இருந்து வருபவர் ஆரி. நேர்மையாகவும் மற்றவர்களின் மனதை புண்படுத்தாமலும் யாரைப் பற்றியும் பின்னால் தவறாக பேசாமலும் இருந்து வருகிறார். சக ஹவுஸ்மேட்ஸ் எவ்வளவு காயப்படுத்தினாலும் நிதானம் இழக்காமல் இருந்து வருகிறார். யாரையும் தரக்குறைவாக பேசாமலும் தவறு என்றால் முகத்திற்கு நேராக பேசியும் தீர்த்து வருகிறார். 

இதனாலேயே மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை காட்டிலும் ஆரி சிறந்த நபராக தெரிகிறார். ஹவுஸ்மேட்டுகளுக்கு ஆரியை பிடிக்காவிட்டாலும் அவர்களின் குடும்பத்திற்கும் பொது மக்களுக்கும் அவரை ரொம்பவே பிடித்துவிட்டது. கமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட ஆரியின் பெயரைதான் கத்தி ஆரவாரம் செய்கின்றனர் ரசிகர்கள். 

மொத்த ஹவுஸ்மேட்ஸும் சேர்ந்து ஆரியை கார்னர் செய்து சண்டை போட்ட போதும் மன உறுதியுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வருகிறார். இதனால் ஆரிக்குதான் பிக்பாஸ் டைட்டில் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே வாரம்தோறும் நாமினேஷனில் வந்தவர் ஆரி.

ஒவ்வொரு வாரமும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை காப்பாற்றினர் மக்கள். இந்நிலையில் 5 ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவராய் உள்ள ஆரியை எப்படியாவது டைட்டில் வின்னர் ஆக்கிவிட வேண்டும் என்று உறுதியாக உள்ளனர். இதற்காக வாக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். இன்று பிக்பாஸின் கிராண்ட் ஃபினாலே நடைபெற்று வரும் நிலையில் ஃபைனலிஸ்ட்டுகள் பெற்ற வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஆரி அர்ஜூனன் மொத்தமாக 23 கோடி வாக்குகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுதான் அதிகளவான வாக்கு பதிவு என்பதும் தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக பாலாஜி முருகதாஸ் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்ற தகவல்கள் நேற்றிலிருந்து வெளியான வண்ணம் உள்ளது. 

நமக்கு கிடைத்த தகவலின் படி, பிக்பாஸ் சீசன் 3-ன் டைட்டில் வின்னரான முகென் ராவ் உள்ளே சென்று சோம் சேகரை கூட்டி வந்தாராம். அதன் பின் ஷெரின் உள்ளே சென்று ரம்யா பாண்டியனை கூட்டி வந்துள்ளார். பிறகு உள்ளே என்டரான கவின் ரியோவை அழைத்து வர.. ஃபினாலே இறுதி கட்டத்தில் ஆரி மற்றும் பாலாஜி உள்ளனர். அதன் பிறகு பிக்பாஸ் டைட்டில் 4 வின்னர் ஆரி தான் என்ற அறிவிப்பை கமல் ஹாசன் கூறியுள்ளார்.