புதிய பாடத்திட்டத்துடன் நாளை முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அறிவுத்துள்ளது.
“கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 

இதனால், பள்ளிகளுக்கு மிக நீண்ட நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன. எனினும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் "மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித் துறை  உத்தரவிட்டு
உள்ளது". 

மேலும், "விடுதிகளில் பாதுகாப்பு வழி முறைகள் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கவும் பள்ளிக் கல்வி துறை உத்தரவில் கேட்டுக்கொள்ளப்பட்டு
உள்ளது". 

ஒவ்வொரு மாணவருக்கும் "பத்து விட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும், மாணவர்களின் வருகையை பொறுத்து அந்தந்த பள்ளிகளுக்கு மாத்திரைகளை விநியோகம் செய்ய வேண்டும்” என்றும், பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் "10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டிருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது". 

இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளது. 

அத்துடன், “இந்த வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்களின் படியே, இந்த கல்வி ஆண்டில் மீதம் இருக்கும் நாட்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும்" என்றும், பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதன் படி, “நாளை முதல் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படவுள்ள நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது” என்று, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக, சென்னை செனாய் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார். 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் நாளை முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 அம் வகுப்புகள் செயல்பட உள்ளன என்றும், இதன் காரணமாக பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன என்றும், இந்தப் பணிகளை மாநிலம் முழுவதும் உள்ள கல்வித் துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்” என்றும், அவர் கூறினார்.