மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ரசிகர்களை பக்கத்தில் நெருங்க விடாத ஒரு சில நடிகர்களுக்கு மத்தியில், தன் ரசிகனை பக்கத்தில் அழைத்து கன்னத்தில் முத்தம் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதிதான். மிகவும், எளிமையான தோற்றம், நேர்மையான குணம், ரசிகர்களை மதிக்கும் மனம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதனை மறுக்காமல் ஏற்று நடிப்பவர்.

இதையடுத்து பொங்கலை முன்னிட்டு விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். சமீபத்தில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஹிந்தியில் அவர் நடிக்கவிருக்கும் காந்தி டாக்ஸ் திரைப்படத்தை பற்றிய அறிவிப்புகளும் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடா, மராத்தி உள்ளிட்ட 6 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், விஜய் சேதுபதி நேற்று நடிகை குஷ்புவின் வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்றுள்ளார். அப்போது விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார். வீட்டு சாப்பாட்டுடன் நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டோம். ஒரு சாதாரண நாளை சிறப்பான நாளாக மாற்றியதற்கு நன்றி விஜய். நிறைய அன்பு அத்துடன் குட் லக் என்று வாழ்த்தியுள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், மும்பைகார், இடம் பொருள் ஏவல், தீபக் சுந்தர்ராஜனின் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம், 19 (1) (a) என்று ஏராளமான படங்கள் உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் முகிழ் என்ற வெப் திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியானது. ஒரு மணி நேரம் கொண்ட இந்த வெப் படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா, ரெஜினா கசண்ட்ரா மற்றும் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கார்த்திக் இயக்கியுள்ளார். 

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. லாபம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.