மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்கள் மூடும் நடவடிக்கை கைவிடவேண்டும் என அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

epsஅதிமுக அரசின் அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல மக்கள் நல திட்டங்களுக்கு நிதி நெருக்கடியை காரணம் காட்டி திமுக அரசு மூடு விழா நடத்துவது கண்டிக்கத்தக்கது மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்கள் மூடும் நடவடிக்கை கைவிடவேண்டும். தொடர்ந்து நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார் என பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு தரமான மருந்துகள் கிடைத்திடும் வகையில் மலிவு விலையில் மருந்துகள் அம்மா மருந்தகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அம்மா உணவகம் ,அம்மா சிமெண்ட் ,அம்மா குடிநீர், அம்மா மினி கிளினிக் ,தாலிக்கு தங்கம் திட்டம் ஆகிய மக்கள் நலத்திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்தியது.தற்போது அந்த வரிசையில் அம்மா மருந்தகங்களுக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. 


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நிதி ஆதாரத்தை பெருக்கவும் இரண்டு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்கள் என்ன செய்கின்றன ? அரசுக்கு என்ன ஆலோசனைகள் வழங்கின என்று தெரியவில்லை. வருவாயைப் பெருக்க வழி தெரியாமல் தவிக்கும் திமுக அரசு,  அதிமுக அரசால் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.  அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தக‌ங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும் மக்கள் நலனுக்கு எதிரான திமுக அரசு உடனே கைவிட வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  வலியுறுத்தியுள்ளார். 

மேலும் மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில்  பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று  காலை 9 மணிக்கு குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு  உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை.  எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .

அதனைத்தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றமைக்கும், குறைந்தப்பட்ச 
ஆதார விலை (MSP)  நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும் எனது நன்றிகளை மாண்புமிகு  பாரத பிரதமர்  அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என எதிர் கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் பதிவிட்டுயிருந்தார் .