பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும் என தற்கொலைக்கு முன் கரூர் மாணவி எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

sexulகரூர் அரசு காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தநிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வீடு திரும்பி உள்ளார். பள்ளியில் இருந்து திரும்பிய மாணவி சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாணவி மன விரக்தியில் அமைதியாக இருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அவரது தாய், ஏன் அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டு சமாதானப்படுத்தியுள்ளார். இந்த  நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் மாணவியிடம் சோகத்திற்கான காரணத்தை விசாரித்துள்ளார். அதற்கு மாணவி பதில் ஏதும் அளிக்கவில்லை.

அதனைதொடர்ந்து பின்னர் வீட்டிற்குள் சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு மூதாட்டி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று குரல் கொடுத்துள்ளார். ஆனால் மாணவி திரும்ப குரல் கொடுக்கவில்லை. பின்னர் மூதாட்டி அறைக்குள் சென்று பார்த்தபோது மாணவி தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில்  முதலில் மாணவியின் தாய்க்கு தகவல் கொடுத்தார். மகள் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் வேலையிலிருந்து அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தார். மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து கதறி அழுதார். பின் தகவல் அறிந்து வந்த வெங்கமேடு போலீசாடிர் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது தற்கொலைக்கு முயல்வதற்கு முன்னர் மாணவி எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. அதில், பாலியல் தொல்லையால் உயிரழக்கும் கடைசி பெண் நானாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், நீண்ட காலம் இந்த பூமியில் வாழ ஆசைப்பட்ட எனக்கு அதற்கு வாய்ப்பில்லாமல் பாதியிலேயே செல்வதாகவும் எழுதியிருந்தார். மேலும் தன்னை தற்கொலைக்கு தூண்டியது யார் என்று இந்த கடிதத்தில் தெரிவிக்க பயமாக இருக்கிறது என்றும், யாரிடமும் சொல்லாமல் செல்வதால் குடும்ப உறுப்பினர்கள் என்னை மன்னிக்குமாறும் உருக்கத்துடன் எழுதியிருந்தார்.

மாணவி எழுதிய கடித்தில் கீழ்க்கண்ட வாசகம்தான் எழுதப்பட்டிருந்ததாதக கூறப்படுகிறது, அதில் "செக்சுவல் ஹராஸ்மெண்டடால சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழரத்துக்கு ஆசைப்பட்டேன், ஆனா, இப்போ பாதியிலேயே போரேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை ஆனா முடியல. ஐ லவ் அம்மா, சித்தப்பா, மணி மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும், ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன் மன்னிச்சுருங்க என்றும், இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது என்றும் எழுதியுள்ளார்

இந்நிலையில் இந்த கடிதத்தை கைப்பற்றிய வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மாணவியின் உறவினர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து மாணிவியின் செல்போனில் வந்த தகவல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.