தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகியாக, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரைப்பயணத்தில் தொடர்ந்து கதாநாயகியாக திகழ்கிறார் நடிகை த்ரிஷா. சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட த்ரிஷா சில தினங்களுக்கு முன்பு வைரஸ் தொற்றிலிருந்து குணமாகி மீண்டு வந்து தற்போது படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய சினிமாவின் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். கோடை வெளியீடாக ரிலீசாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து மலையாளத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து ராம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அரவிந்த்சாமி உடன் சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்துள்ள த்ரிஷா, நாயகியாக நடித்துள்ள கர்ஜனை மற்றும் ராங்கி ஆகிய படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. 

அடுத்ததாக நேரடியாக தெலுங்கில் தயாராகும் புதிய வெப்சீரிஸான பிருந்தா வெப்சீரிஸிலும் த்ரிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த வெப்சீரிஸ் Sony LIV தளத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவினாஷ் கொல்லா மற்றும் ஆசிஷ் கொல்லா  இணைந்து தயாரிக்கும் பிருந்தா வெப்சீரிஸை இயக்குனர் சூர்யா வங்களா எழுதி இயக்குகிறார்.

தினேஷ்.K.பாபு ஒளிப்பதிவில் சக்திகாந்த் கார்த்திக் இசையமைக்கும் பிருந்தா வெப் சீரிஸின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை த்ரிஷா காவல்துறை அதிகாரியாக பிருந்தா வெப்சீரிஸில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்திலிருந்து காவல்துறை அதிகாரியாக காக்கி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் இதோ…