“புருஷன், மேனேஜர், ஆபீஸ் நண்பர்கள், ட்ரைவர் என உல்லாசமாக வாழ்ந்த அரசு பெண் ஊழியர் ஒருவர், அடுத்தடுத்து மோசடியில் ஈடுபட்டதால், தற்போது கைது செய்யப்பட்டு கம்பி எண்ணி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை பெரம்பூர் பகுதியின் உள்ள ஓட்டேரியை சேர்ந்த உமா மகேஸ்வரி என்கிற பெண், சென்னை தலைமை செயலகத்தில் ஆவணங்கள் சரிபார்க்கும் பிரிவில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.

இவர், ஏற்கனவே திருமணம் ஆகி தனது கணவருடன் வசித்து வந்த நிலையில், நாளடைவில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவனை விரட்டி விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இதனையடுத்து, இவர் தனியார் நிறுவன மேனேஜர் லோகநாதன் என்பவரை 2 வது திருமணம் செய்துகொண்டு, வாழ்ந்து வந்தார்.

ஆனால், தனது 2 கணவருடன் வாழும் போதே வீட்டில் பணிபுரிந்து வந்த லட்சுமிபதி என்ற டிரைவருடன் உமா மகேஸ்வரி கள்ளக் காதல் உறவில் இருந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் சென்னைக்கு அருகே பெரம்பூர் பகுதியின்  ஓட்டேரியை  சேர்ந்த  உமா மகேஸ்வரி  என்ற பெண்  தலைமை செயலகத்தில் ஆவணங்கள் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் இவரின் கணவருக்கும் ஏற்பட்ட தகராறில் கணவனை விரட்டி விட்டு ,ஒரு தனியார் நிறுவன மேனேஜர் ஒருவரை இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டார் .அவருடன் இருக்கும்போதே  டிரைவராக பணிபுரியும் லட்சுமிபதி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2 வது கணவன் லோகநாதன் வீட்டில் இல்லாத நேரத்தில் டிரைவர் லட்சுமிபதி, உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த கள்ளக் காதல் உறவை பயன்படுத்திக்கொண்ட உமா மகேஸ்வரி, லட்சுமிபதியிடமிருந்து 4 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு, அவரையும் கழட்டி விட்டு தவிர்த்து வந்திருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, தான் பணி புரிந்து வரும் தலைமை செயலகத்தில் மேலும் பலரிடம் நெருங்கிப் பழகி வந்ததுடன், தனது அலுவலக நண்பர்கள் சிலரிடமும் அவர் பணம் பெற்றுக்கொண்டு, வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், டிரைவர் லட்சுமிபதி  அந்த பெண்ணிடம் தனது கள்ளக் காதல் உறவை துண்டிக்காமல், வெளியே வர வழைத்து அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இது குறித்து அறிந்த 2 வது கணவன் லோகநாதன், மனைவி உமா மகேஸ்வரியிடம் சண்டை பொட்டு உள்ளார். 

இந்த சண்டையின் உச்சமாக, மனைவியைப் பற்றி விசாரிக்க டிரைவராக வேலைப் பார்த்த லட்சுமிபதியை தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார்.

அப்போது, வீட்டுக்கு வந்த அவரிடம் 2 வது கணவர் சண்டைப் போட்டு உள்ளார். இதனால், ஏற்பட்ட சண்டையில் அவரை, அவர்கள் இருவரும் சேர்ந்து அடித்து கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், பாதிக்கப்பட்ட லட்சுமிபதி போலீசில் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் லோகநாதன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். 

அத்துடன், அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், சென்னை தலைமை செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.