தோப்பில் கள்ளக் காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மனைவியை, கையும் களவுமாகக் கணவன் பிடித்ததால், அவரை அங்கேயே கொன்றுவிட்டு, நாடகமாடிய கொடூர மனைவியால் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள மீனாட்சிப்பேட்டை ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான முருகன், தனது அத்தை மகளான வனஜாவை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி திருமணம் செய்துகொண்டார். மனைவி வனஜா, முருகனின் அத்தை மகள் ஆவார். இந்த தம்பதிக்கு 5 மற்றும் 6 வயதில் 2 குழந்தைகள் உள்ளன. 

இப்படியான நிலையில், 38 வயதான முருகன், அந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். அத்துடன், முருகன் வேலை விசயமாக, அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இந்த நிலையில் தான், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவருக்கும், வனஜாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நெருக்கமும் ஏற்பட்டு உள்ளது.

இந்த பழக்கம், அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

இந்த விவகாரம் வனஜாவின் கணவர் முருகனுக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த முருகன், தனது மனைவியை கண்டித்து உள்ளார்.

இதனையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன், வழக்கம் போல் கட்டிட வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது, அவர் மனைவி வனஜா, வீட்டில் இல்லாமல், 2 குழந்தைகள் மட்டும் இருந்து உள்ளனர்.

இதனால், சற்று சந்தேகப்பட்ட முருகன், “அம்மா எங்கே?” என்று, தனத பிள்ளைகளிடம் கேட்டுள்ளார். அப்போது, “அம்மா தோப்பு பக்கமாகப் போனார்” என்று, பிள்ளைகள் கூறவும், தனது மனைவியை தேடி முருகன், அங்குள்ள தோட்டத்தின் பக்கம் தேடிச் சென்று உள்ளார்.

அப்போது, அங்குள்ள தோட்டத்தில், மனைவி வனஜா, கள்ளக் காதலன் கிருஷ்ணாவுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்ததை நேரில் பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

இதனால், கடும் கோபம் அடைந்த கணவன் முருகன், மனைவியிடமும், கள்ளக் காதலனிடமும் சண்டை போட், அவர்களை அடிக்க பாய்ந்துள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக முருகனை, கள்ளக் காதலன் கிருஷ்ணா, தனது லுங்கியை பயன்படுத்தி அவரின் கழுத்தை இறுக்கி பிடிக்க, மனைவி வனஜாவும் சேர்ந்து இறுக்கிப் பிடித்தபடி, அவரை அடித்து கொன்று உள்ளனர். இதில், அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.

அத்துடன், இந்த கொலையை மறைக்கும் விதமாக, “எனது கணவன் கடன் தொல்லை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக” அவர் மனைவி வனஜா நாடகமாடி உள்ளார்.

மேலும், தனது உறவினர்களையும் நம்ப வைத்த வனஜா, உயிரிழந்த கணவன் முருகனின் உடலை மயானத்திற்குக் கொண்டு சென்று எரிக்க முயன்று உள்ளார். 

அப்போது, போலீசாருக்கு யாரோ ரகசிய புகார் அளித்த நிலையில், அங்கு விரைந்து வந்த குறிஞ்சிப்பாடி போலீசார், முருகனை உடலை எரியூட்டும் முன்பாக தடுத்து நிறுத்தி, பிரேதப் பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இதனைச் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், “முருகனை அவரது மனைவியும், கள்ளக் காதலனும் சேர்ந்து கொலை செய்தது” கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த குறிஞ்சிப்பாடி போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். 

குறிப்பாக, கள்ளக் காதல் மோகத்தால் மனைவியே, கணவனை கொன்றுவிட்டு சிறைக்குச் சென்றதால், இவர்களது இரு குழந்தைகள் தற்போது ஆதரவின்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.