தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான AXESS FILM FACTORY சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு தயாரிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தன. முன்னதாக ஃபேண்டசி காமெடி திரைப்படமாக வெளிவந்த மரகதநாணயம் சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. அடுத்தடுத்து ஓ மை கடவுளே, பேச்சிலர் என வெற்றிப் படங்களை கொடுத்து வரும் AXESS FILM FACTORY தயாரிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் மிரள்.

 த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் மிரள் படத்தில் நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ள மிரள் திரைப்படத்திற்கு பிரசாத்S.N இசையமைத்துள்ளார். இந்நிலையில் மிரள் திரைப்படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது.  சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள மிரள் மோஷன் போஸ்டர் இதோ…