டார்லிங் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக அசத்தி வருபவர் நிக்கி கல்ராணி.முதலில் கன்னட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக சில மலையாள படங்களில் நடித்து பிரபலமானவராக மாறினார்.

தமிழில் டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் அடுத்ததாக கலகலப்பு 2,கோ 2,மொட்ட சிவா கெட்ட சிவா,மரகத நாணயம் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.வெகு விரைவில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் நிக்கி கல்ராணி.

தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் நிக்கி கல்ராணி.நடிகர் ஆதியுடன் காதலில் விழுந்த நிக்கி கல்ராணி கடந்த மே 20ஆம் தேதி அவரை கரம்பிடித்தார்.இவரது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது இவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் வெல்லும் திறமை என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று தனது சின்னத்திரை என்ட்ரியை கொடுக்கிறார் நிக்கி கல்ராணி.இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.