விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பங்கேற்று அசத்தியிருந்தார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்திருந்தார் பவித்ரா.மேலும் உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று அசத்தியிருந்தார்.மேலும் மிஸ் மெட்ராஸ் போன்ற சில பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார் பவித்ரா.

தமிழில் ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் நாய் சேகர்,கதிர் நடிக்கும் யுகி என சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பவித்ரா.நாய் சேகர் படம் சில மாதங்களுக்கு முன் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தவிர இவர் நடித்துள்ள ஹே மேஜிக் மனமே  படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் முதல் முதலில் ஹீரோயினாக நடித்திருந்த உல்லாசம் என்ற மலையாள பட ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படம் வெகு விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது,இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்