எதற்கும் துணிந்தவன் படத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ப்ரோமோ !
By Aravind Selvam | Galatta | March 14, 2022 22:17 PM IST

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து அசத்தும் சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை அடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவுள்ள வாடிவாசல்,இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு படம் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் சில மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதற்கும் துணிந்தவன் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தயாரித்துள்ளனர்.பாண்டிராஜ் இந்த படத்தினை இயக்கியுள்ளார்,இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஹீரோயினாக டாக்டர் படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார்.சத்யராஜ்,வினய்,சரண்யா,திவ்யா துரைசாமி, இளவரசு,தேவதர்ஷினி,சிபி,சூரி,புகழ்,தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் ஐந்து மொழிகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் வெற்றிகரமாக சென்று வருவதை முன்னிட்டு ஒரு புதிய ப்ரோமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
#Kannabiran is here to give you all the goosebumps that you need 🔥
— Sun Pictures (@sunpictures) March 14, 2022
Witness @Suriya_offl's power-packed performance in theatres now 🤩@pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #EtharkkumThunindhavan #ET pic.twitter.com/QmtYLB9PaG