மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியால் அடித்துக்கொன்ற மனைவியை கைது செய்த போலீசார், அவரை இந்த கொலை வழக்கிலிருந்து தற்போது விடுவித்து உள்ளனர்.

சென்னை ஓட்டேரி வாழைமா நகர் 9 வது தெருவை சேர்ந்த 43 வயதான பிரதீப் என்பவர், தனது மனைவி பிரீத்தா உடன் வசித்து வந்தார். அவருக்கு வயது 41.

பிரதீப் - பிரீத்தா இந்த தம்பதிக்கு, 20 வயதில் ஸ்ரீகீர்த்தி என்ற மகளும், 10 வயதில் கௌதம் என்ற மகனும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் படித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் தான், மது போதைக்கு அடிமையான 43 வயதான பிரதீப், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும், மது போதைக்கு கடுமையாக அடிமையான பிரதீப், வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் இருக்கும் மனைவியுடன் தினமும் சண்டை போட்டு வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக, எப்போதும் போல் 43 வயதான பிரதீப், நேற்று இரவு குடித்துவிட்டு நல்ல மது போதையில் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது, வீட்டில் பிரதீப்பின் மனைவி சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்த நிலையில், இவர்களது 20 வயதான மகள், அவரது தனி ரூமில் படித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது, மகள் ரூமிற்குள் நுழைந்த தந்தை பிரதீப், தான் பெற்ற மகள் என்றும் பார்க்காமல், தனது மகளிடம் அத்து மீறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், அலறி துடித்து உள்ளார்.

அலறி துடித்த மகளின் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த அவரது தாயார் பிரீத்தா, தங்களது மகளிடம் தனது கணவர் இப்படி அத்து மீறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுக்கொண்டிருப்பதைக் பார்த்து கடும் அதிர்ச்சிடைந்து உள்ளார். மறுகணமே, தனது கணவனிடமிருந்து தனது மகளை மீட்க அந்த தாயார் கடுமையாக போராடி உள்ளார். 

இதனால், கணவன் - மனைவி இடையே அப்போது பெரும் சண்டை நடந்து உள்ளது. அந்த நேரத்தில், கணவனின் இந்த செயலால் கோபத்தில் உச்சத்தில் இருந்த அவரது மனைவி பிரீத்தா, வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து கணவர் பிரதீப்பின் மண்டையில் பலமாக அடித்து தாக்கி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன் பிரதீப், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அத்துடன், கணவனை கொலை செய்த மனைவி பிரீத்தி, இது குறித்து தனது உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் கூறி உள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த உறவினர்கள் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு இது தொடர்பாக தகவல் கூறி உள்ளனர். 

இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிரதீப் சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவனை கொலை செய்த அவரது மனைவி பிரீத்தாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மகள் மற்றும் அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் முழுமையான விசாரணைக்குப் பிறகு, “தற்காப்புக்காகவும், மகளின் பாதுகாப்புக்காகவும், கணவனை தாக்கியதில் அதில் எதிர்பாரத விதமாக கணவன் இறந்து விட்டதும்” போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

இதனையடுத்து, கணவனை கொலை செய்த குற்றத்திற்காக அரவது மனைவியை கைது செய்திருந்த போலீசார், அவரை தற்போது விடுவித்து உள்ளனர். இதனையடுத்து, அந்த பெண்மணி தற்போது வீடு திரும்பி உள்ளார். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.