சின்னத்திரை மக்கள் வாழ்வில் அன்றாடம் மகிழ்விக்கும் எண்டெர்டைன் செய்யும் கருவிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.பல மீடியம்கள் மக்களை மகிழ்விக்க இருந்தாலும் அவரவர் வீட்டிலேயே தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளையும்,திரைப்படங்களையும்,தொடர்களையும் கொண்டுசேர்க்கும் சின்னத்திரைக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு.

சின்னத்திரையில் பல நட்சத்திரங்களையும் உருவாகியுள்ளது.பலரும் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று ஜொலித்து வருகின்றனர் அத்துடன் பல வெள்ளித்திரை நட்சத்திரங்களும் சின்னத்திரையில் நுழைந்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.சினிமாவிற்கு நிகராக சின்னத்திரை நிகழ்ச்சிகளும்,தொடர்களும் ரசிகர்களிடம் பிரபலமானவையாக இருந்து வருகின்றன.

சின்னத்திரையில் இருக்கும் பல நட்சத்திரங்களும் தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளனர்.அப்படி சின்னத்திரையில் தங்கள் திறமையை நிரூபித்து மக்கள் மனதில் இடம்பிடித்து ஜொலித்து வரும் பல நட்சத்திரங்களுக்கும் விருதுகள் வழங்கி அவ்வப்போது பலரும் கௌரவப்படுத்தி வருகின்றனர்.

மக்களால் கொண்டாடப்படும் மற்றும் கொண்டாடப்பட்ட பல சின்னத்திரை பிரபலங்களுக்கு கடந்த சில வருடங்களாக கலாட்டா நக்ஷத்திரா விருதுகள் வழங்கியும்,சிறப்பு பட்டங்கள் வழங்கியும் கலாட்டா அவ்வப்போது அவர்களை கௌரவித்து வந்தோம்.

அந்த வகையில் 2021-ல் மக்கள் மனம் கவர்ந்த சின்னத்திரை கதாநாயகன் மற்றும் கதாநாயகியை கண்டறியும் வகையில் Galatta Dream Television Celebrity Lover என்ற Poll ஒன்றை கலாட்டா சார்பாக நடத்தி வருகிறோம்.இதில் தங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரத்துக்கு வாக்களித்து அவர்களை வெற்றிவாகை சூடவைக்க ரசிகர்கள் ஆவலுடன் வாக்களித்து வருகின்றனர்.இந்த வாக்களிப்பிற்கான ஓட்டிங் வரும் பிப்ரவரி 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரத்துக்கான வாக்குகளை இந்த லிங்கின் மூலம் பதிவிடலாம்

Galatta Dream Television Celebrity Lover Voting 2022