தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக தனது ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் நடிகர் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக வெளி வர உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கோடை வெளியீடாக ரிலீஸாகவுள்ளது.

மேலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் பலவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா திரைப்படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் இரண்டு திரைப்படங்களின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வரிசையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாக உள்ளது. மகான் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன், சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள மகான் படத்திற்கு, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் மகான் படத்தின் 2-வது பாடலாக “எவன்டா எனக்கு கஸ்டடி” எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சீயான் விக்ரமின் கலக்கலான நடனத்தில் வெளிவந்த பாடல் தற்போது யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த பாடல் இதோ…