யோகி பாபுவின் பன்னிக்குட்டி பட கலகலப்பான பாடல் ப்ரோமோ
By Anand S | Galatta | January 28, 2022 19:33 PM IST

தமிழ் திரையுலகின் தவிக்கமுடியாத நகைச்சுவை நடிகராக வளர்ந்துள்ள நடிகர் யோகிபாபு, தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட், தல அஜீத்துடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன் அயலான், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, விஷாலுடன் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் யோகிபாபு, பொம்மை நாயகி , காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே யோகிபாபு கதாநாயகனாக நடித்து அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பன்னிக்குட்டி
கிருமி பட இயக்குனரும் பிரபல படத்தொகுப்பாளருமான அனுசரண் முருகையன் இயக்கத்தில் யோகிபாபு & கருணாகரன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள பன்னிகுட்டி திரைப்படத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான திண்டுக்கல்.ஐ.லியோனி, சிங்கம் புலி, KPY ராமர், டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 11:11 புரோடக்சன்ஸ் வழங்கும் பன்னிகுட்டி திரைப்படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைக்க, சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பன்னிக்குட்டி திரைப்படத்தின் பன்னிகுட்டி பாடல் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கலகலப்பான அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.
Mahesh Babu's heartfelt emotional statement on his brother Ramesh Babu's death!
09/01/2022 03:29 PM
Yogi Babu signed onboard to act in this exciting comedy entertainer! Check Out!
01/01/2022 03:31 PM